ஜூன் 2010: குறுக்கெழுத்துப் புதிர்
நான் ஏதோ x+y, x-y என்று பாடம் நடத்திக் கொண்டிருப்பவன். இத்தனை நாள் தென்றலில் புதிர் செய்ததற்கான ̀தண்டனை'யாக வடநாட்டினர் அதிகம் பயிலும் ஒரு மேலாண்மைக் கல்லூரியில் 150 பேருக்குத் தமிழ் சொல்லிக் கொடுப்பீர்களா என்றதற்குக் கோடை விடுமுறையில் நாலு நாள்தானே என்று ஒத்துக்கொண்டு விட்டேன். (நம்முடைய புதிரைப் போட இன்னும் கொஞ்சம் பேர் கிடைக்காதா என்ற நப்பாசையும்தான்). ஆனால் வெறும் பேச்சுத் தமிழ்தான் என்றதும் அதில் இறங்கிய பின்தான் ஆழம் புரிந்தது. எங்க வீடு என்றால் "வீடு எங்கே" என்பதா அல்லது "எங்களுடைய வீடு" என்பதா என்று சந்தேகம் கேட்டனர். (பேச்சுத்தமிழிலும் புதிர் ஆக்கலாம் போலிருக்கிறது). அந்த 150ல் கடைசிவரை தங்கியவர் 20 பேர்தான். அந்த 20 பேர் ஓரளவு கற்றுக் கொண்டார்களென்று நினைக்கிறேன்.

குறுக்காக:
4. ஆறு மாதம் சீமாட்டி காலைத் தடவி ... (3)
5. ... இந்நேரம் புளிக்கு ஒதுக்கப்பட்ட பொதுக்குழு இளிப்பு கலைந்தது (5)
7. விறகடுப்பை நன்றாக எரியச் செய்ய குண்டாகு (2)
8. நிச்சயம் இலங்கை நகரம் பின்னே குறையான கலிப்பா மாற்றியெழுதப்படும் (6)
10. பக்தியுடன் கைலி அணிந்து செல்லுமிடம் (6)
11. விண்ணில் தொடங்கிய மழை முடிய ஆசைப்படு (2)
12. மாற்றாக, கணவன் தலையின்றிக் குலுக்கு (5)
14. மண்வெட்டியால் வேலை செய்து குலை (3)

நெடுக்காக:
1. கதைக்கு அடிப்படைத் தூசி உணமையாக இருக்க வேண்டியதில்லை (6)
2. அந்த ஆழாக்கு கிடையாது, வேறு விதமாய் (7)
3. அறு + 1 நாற்காலியை விட்டு நீங்கு (2)
6. அசைய பிழைப்பு இயந்திரத்தனமானது என்பர் (3, 4)
9. படுப்பதற்குத் தயார் செய்து கப்பலை ஓட்டுவர் (2, 4)
13. திருக்குறளை ஆதிமுதல் அந்தம்வரை அனுபவி (2)

நீங்கள் புதிர் மன்னரா?
குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை 15-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. 15க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.

வாஞ்சிநாதன்

மே 2010 விடைகள்

© TamilOnline.com