'காசு இருக்கணும்'
'காசு இருக்கணும்' என்கிற படத்திற்காக முற்றிலும் மாறுபட்ட புதிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பாக்யராஜ். ஜி.ஆர். கோல்டு பிலிம்ஸ் நிறுவனத்தாரின் தயாரிப்பில் வளர்ந்து வரும் இப்படத்தில் விஸ்வா நாயகனாக நடிக்கிறார்.

நந்திதா, பாயல், லக்ஷா என்று மூன்று நாயகிகள் இப்படத்தில் நடிக்கவிருக்கின்றனர். இவர்களுடன் விலிங்ஸ்டன், பாண்டு, சார்லி, முத்துக்காளை ஆகியோரும் நடிக்கின்றனர்.

கவின்சாரதா இசையமைப்பில் உருவாகும் 'காசு இருக்கணும்' படத்தின் கதை. திரைக்கதை, வசனத்தை ஜி.ஆர். கவனிக்க, இயக்குகிறார் ஆர். குமரன்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com