சீரக ரசம்
தேவையான பொருட்கள்
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
துவரம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
கொத்துமல்லி விதை - 1 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
கடுகு - 1 தேக்கரண்டி
புளி - 1 மேசைக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை
சீரகம், துவரம் பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல், கொத்துமல்லி விதை, பெருங்காயத் தூள், கறிவேப்பிலைக் கொத்து இவற்றை வறுக்காமல் தண்ணீரில் போட்டுச் சிறிது நேரம் வைக்க வேண்டும். பிறகு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின் புளித் தண்ணீரில் உப்பு, கறிவேப்பிலை சேர்த்துக் கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்ததும், அரைத்த விழுதுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து ரசத்துடன் கலக்கவும். ரசம் நுரைத்து வந்ததும், இறக்கிய பின் நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும். கமகம சீரக ரசம் தயார். சோற்றில் ஊற்றி ஒரு பிடி பிடிக்க வேண்டியதுதான். அப்படியேவும் குடிக்கலாம்.

வர்தினி நாராயணன்,
கூப்பர்டினோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com