பருப்புத் துவையல்
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 3 மேசைக்கரண்டி
மிளகு - 12
நெய் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
துவரம் பருப்பு, மிளகு இரண்டையும் சிறிது நெய்யில் பொன்னிறமாக வறுக்கவும். உப்புச் சேர்த்து மசிய அரைத்து எடுக்கவும். பாசிப் பருப்பையும் இதே போல் வறுத்துத் துவையல் செய்யலாம். மிளகுக் குழம்பு, சீரக ரசத்துடன் சாப்பிட்டால், ம்..... சுவையோ சுவை!

வர்தினி நாராயணன்,
கூப்பர்டினோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com