மே 22, 2010 சனிக்கிழமை மாலை 3:00 மணி முதல் 7:30 மணிவரை தென் கலிபோர்னியா தமிழ் சங்கம் தமிழ்க் குடும்ப கொண்டாட்டம் என்ற தலைப்பில், தமிழ்ப் புத்தாண்டையும் அன்னையர் தினத்தையும் ஒருசேரக் கொண்டாட உள்ளது. அன்றைய நிகழ்ச்சியில் குழந்தைகள் முதல் முதியோர்வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். பாலாஜி குழுவினரின் (தமிழ்த் திரை) மெல்லிசை நிகழ்ச்சியும் உண்டு. நிகழ்ச்சி முடிவில் இரவு விருந்து வழங்கப்படும். குடும்பத்தோடு பங்கேற்க உரிய நிகழ்ச்சி இது. நிகழ்ச்சி விவரம்: நாள்: மே 22, சனிக்கிழமை நேரம்: மாலை 3:00 முதல் 7:30 மணிவரை இடம்: சின்மயா மிஷன் கலை அரங்கம், 14451 பிராங்க்ளின் அவன்யு, டஸ்டின், 92780. தொலைபேசி: 714-832-7669
கட்டணம்: குழந்தைகள் (5 வயதுக்குக் கீழ்) - இலவசம் குழந்தைகள் (6-10 வயது) - $10 ஏனையர் (10 வயதுக்கு மேல்) - $15
நுழைவுச் சீட்டு பெற: கே.வி. ராகவன் 714-325-1106 பாலா பழனிச்சாமி 714-588-0602 பத்மநாபன் ஐயர் 562-556-9878 சோமசுந்தரம் 714-718-3592 ராமகிருஷ்ணன் 714-618-1545 சுப்பு சண்முகம் 714-257-9325
இணைய தளம்: www.socaltamil.org
ஆர். குருமூர்த்தி |