கலாஞ்சலி குழுவினர் நாட்டிய நிகழ்ச்சி
ஏப்ரல் 11, 2010 அன்று, கன்கார்டில் உள்ள சிவ முருகன் ஆலயத்திற்கு நிதி திரட்டும் முகமாக, சான்ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியின் பாலோ ஆல்டோவில் உள்ள கபர்லி கலையரங்கில் காதரைன்-குஞ்ஞிராமன் தம்பதியினரின் கலாஞ்சலி குழுவினரது நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. கலாஞ்சலியின் இந்நாள், முன்னாள் மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்றுப் பல்வேறு நிகழ்ச்சிகளை அளித்தனர். பூமாஞ்சலியுடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து ஜதிஸ்வரம், முருகசப்தம், சங்கராபரணத்தில் வர்ணம், ஆனந்த நடமிடும் பாதம், காமே கணபதி, ஜய சம்போ, ஏன் பள்ளி கொண்டீரய்யா, குஜராத் மாநில நாட்டுப்புற நடனம், கடைசியாக தனஸி ராகத்தில் தில்லானாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது.

கன்கார்டு கோவிலின் சார்பாக அக்கோவிலின் அர்ச்சகர்கள் குழுவினருக்குச் சிறப்புச் செய்து ஆசிர்வதித்தார்கள். திருமதி கௌசல்யா ஹார்ட் நன்றி தெரிவித்துப் பிரசாதம் வழங்கினார்.

ஹெர்குலஸ் சுந்தரம்,
பெர்க்கிலி, கலிஃபோர்னியா

© TamilOnline.com