மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
2010 மே 28ம் தேதி முதல் ஜூலை இறுதிவரை 'அம்மா' ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவின் பல ஊர்களுக்கு வருகை தர இருக்கிறார். அன்பு, உண்மை, துறவு, தியாகம் முதலிய தெய்வீக குணங்களின் இருப்பிடமாகத் திகழும் அம்மாவை 'அரவணைக்கும் ஞானி' (Hugging Saint) என்று அழைக்கிறார்கள். மனித இனத்திற்கு அயராது சேவை செய்யும் அம்மா மக்களின் துயர் துடைப்பதற்க்காகத் தமது நேரத்தையும், வாழ்நாளையும் முழுமையாக அர்ப்பணித்துள்ளார்.

அம்மா வருகை தர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:
சியாடல்05.28 - 05.31
சான் ஃபிரான்சிஸ்கோ- விரிகுடாப் பகுதி06.03 - 06.12
லாஸ் ஏஞ்சலஸ்06.14 - 06.18
ஆல்பகர்க்06.20 - 06.24
டாலஸ்06.27 - 06.28
சிகாகோ06.30 - 07.02
நியூயார்க்07.04 - 07.06
வாஷிங்டன் டி.சி.07.09 - 07.11
பாஸ்டன்07.13 - 07.16
டொரன்டோ, கனடா07.19 - 07.22


இலவசப் பொதுநிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மீகச் சொற்பொழிவுகள், தியானம் மற்றும் பஜனை நடைபெறும். சில ஊர்களில் ஆன்மீக முகாம்களும் (retreat) நடைபெறும். இதில், ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாற்றம், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும்.

மக்களின் மேம்பாட்டுக்காக அம்மா ஆற்றும் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: amritapuri.org
மேலும் விபரங்களுக்கு: www.amma.org

சூப்பர் சுதாகர்

© TamilOnline.com