விஷாலுக்குத் 'திமிரு'
வேகமாக முன்னேறி வரும் இளம் கதாநாயகன் விஷால் நடிப்பில் உருவாகிறது 'திமிரு'. இவர் நடித்த 'செல்லமே' மற்றும் 'சண்டைகோழி' இரண்டுமே வெற்றி பெறவே, திரை உலகம் இவரை முற்றுகையிட ஆரம்பித்துள்ளது.

ஜி.கே. பிலிம் கார்ப்பரேஷனின் இரண்டாவது தயாரிப்பான 'திமிரு', முரட்டுதனமான ஒரு கல்லூரி மாணவனைப் பற்றிய கதை.

நாயகி ரீமா சென். இப்படத்திற்கு ஷிரேயா ரெட்டி என்கிற புதுமுகம் இரண்டாவது நாயகியாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பு. படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றோடு இயக்கத்தையும் கவனிக்கிறார் தருண்கோபி.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார் பானுசந்தர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு பானுசந்தர் நடிக்கவிருக்கும் படம் 'திமிரு'.

கேடிஸ்ரீ

© TamilOnline.com