1. 0, 1, 1, 2, 3, 5, 8, 13 .... என்ற வரிசையில் அடுத்து வரும் என்னவாக இருக்கும்? ஏன்?
2. அது ஒரு மூன்று இலக்க எண். அந்த எண்ணிலிருந்து அதன் தலைகீழ் எண்ணைக் கழித்தால் வரும் விடை அதே மூன்று இலக்க எண்ணின் மாறுவரிசையில் அமைந்திருக்கிறது. அந்த எண் எது?
3. ராமுவின் வயதையும் அவன் தம்பியின் வயதையும் கூட்டினால் வரும் கூட்டுத்தொகை 36. ராமு வயதின் இரண்டடுக்கையும் அவன் தம்பி வயதின் இரண்டடுக்கையும் கூட்டினால் 666 வருகிறது. ராமுவின் வயதைவிட அவன் தம்பியின் வயது ஆறு வருடம் குறைவு என்றால் ராமுவின் வயது என்ன, தம்பியின் வயது என்ன?
4. தாத்தா ஒரு பெட்டியில் சில ஆப்பிள்களை வைத்திருந்தார். அவரிடம் வந்த பேரன் தனக்குச் சில ஆப்பிள்கள் தருமாறு கேட்டான். அவனுக்கு ஒரே ஒரு ஆப்பிளை மட்டும் தந்த தாத்தா, “இந்தப் பெட்டியில் உள்ள ஆப்பிள்களையும், அதைப் போலப் பத்து மடங்கையும், அதில் பாதியையும், பெட்டியில் உள்ள ஆப்பிள்களில் பாதியையும், உன் கையில் இருப்பதையும் சேர்த்துக் கூட்டினால் மொத்தம் நூறு வரும். அப்படியானால் பெட்டியில் எத்தனை ஆப்பிள்கள் உள்ளன என்று சொல். இவை அனைத்தையும் உனக்கே தந்து விடுகிறேன்”என்றார். சிறிது நேரம் யோசித்த பேரனும் சரியான விடையைச் சொல்லி விட்டான். உங்களால் முடிகிறதா?
அரவிந்த்
விடைகள்1. 0, 1, 1, 2, 3, 5, 8, 13 .... வரிசையில் அடுத்து வரும் எண் 21. காரணம், முதல் இரண்டு எண்களின் கூட்டுத்தொகையே அடுத்த எண்ணாக வருமாறு வரிசை அமைந்துள்ளது.
0 + 1 = 1; 1 + 1 = 2; 1 + 2 = 3; 2 + 3 = 5 ..... என்ற வரிசையின்படி அடுத்து வர வேண்டியது 8 + 13 = 21.
2. அந்த எண் = 954
954ன் தலைகீழ் எண் = 459. இதை முதலாம் எண்ணிலிருந்து கழிக்க = 954 - 459 = 495
3. ராமுவின் வயது = x என்க
தம்பியின் வயது = y = ராமுவின் வயதை விட 6 வருடம் குறைவு என்றால் = x - 6
x + y = 36
x + x - 6 = 36
2x - 6 = 36
2x = 36 + 6 = 42
x = 21;
எனவே ராமுவின் வயது 21. அவன் தம்பியின் வயது = 21 - 6 = 15
ராமுவின் வயது + அவன் தம்பியின் வயது = 21 + 15 =36
ராமு வயதின் இரண்டடுக்கு + அவன் தம்பி வயதின் இரண்டடுக்கு = 21 x 21 + 15 x 15 = 441 + 225 = 666
எனவே ராமுவின் வயது 21; தம்பியின் வயது 15
4. ஆப்பிள்களின் எண்ணிக்கையை x என்க.
x + x 10 + x 10/2 + x/2 + 1 = 100
x (1 + 10 + 5 + 0.5) + 1 = 100
x (16.5) + 1 = 100
x (16.5) = 99
x = 99 / 16.5 = 6
x = 6 எனில்..
6 + 6 x 10 + 6 x 5 + 3 + 1 = 100
6 + 60 + 30 + 4 = 100
எனவே பெட்டியில் இருந்த ஆப்பிள்களின் எண்ணிக்கை 6 ஆகும்.