மே 2010: குறுக்கெழுத்துப் புதிர்
இந்த பாழாய்ப்போன கொளுத்தும் சித்திரை வெயிலில் ஐபிஎல் கிரிக்கெட் ஆடுவதை வீட்டில் அமார்ந்து பார்த்துக் களைத்தவர்களுக்கு வியர்க்காமல் விளையாட இந்தச் சொல் விளையாட்டு. புதிதாக வருபவர்கள் இப்புதிரைத் தீர்க்கும் யுக்திகளை முன்பொருமுறை வெளியிட்டது இணையத்தில் காணப்பெறலாம். இதில் வென்றவர்களுக்குப் பெரிய பணத்தொகை ஒன்றும் பரிசாக அளிக்கப்படுவதில்லை. ஆங்கில நாளிதழ்களில் பல வருடங்களாக வரும் புதிர்களை முழுதும் தம்முடைய சொந்த திருப்திக்காகத் தீர்த்துப் பிறர் அறியா வண்ணம் பலர் இன்புற்று வருகிறார்கள். எனவே சில சமயம் என்னுடைய தவறால் உங்கள் பெயர் விடுபட்டுப் போவதைப் பொருட்படுத்தாது இருக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

குறுக்காக:
5. தெரிவித்து அடையாளமிடு வைகை வெள்ளத்தில் பெயர்போன உணவு (6)
6. குளத்திலிறங்கவும் படகிலேறவும் உதவுவது (2)
7. தவறின்றி திருப்பித் திட்டு பொறி பின்வரும் (4)
9. தூண்டிலில் துடிப்பது அங்கு தலையின்றி வியர்த்து அவதியுறு (4)
10. மனதுக்கேற்ற முருகன் குறையுடன் வரும் முன் பிள்ளையாருக்கு மரியாதை (4)
12. இதழும் புருவமும் இணையத் தோன்றியது வடு (4)
13. பாஞ்சாலத்தில் மிகவும் காணப்படும் (2)
14. குழந்தையைக் கொல்ல தலையை வெட்டி அப்பா கள்ளில் கலந்து கொடுப்பார் (6)

நெடுக்காக:
1. இடை பற்றி நீங்கிப் பிடுங்கு (2)
2. சினந்து அரசனுக்குப் பைத்தியம் பிடித்தது (4)
3. ஆடு மாடு இல்லாமல் புகுந்த தடயம் படகோட்டிக்குதவும் (4)
4. விரல்விட்டு எண்ணக்கூடிய சேனையொடு இங்கு ராஜாவின் ஆட்டம் (6)
8. உள்ளே வெளியே 400 தொகை 8 என்றிருந்த தருணம் (3, 3)
11. இன்னொருத்தர் பொருளை விற்றுப் பிழைப்பவர் (4)
12. ஊராரிடமிருந்து பிரி வேறொரு நாளுக்கு மாற்று (3, 1)
15. சித்தப்பா சித்தியிடையே வந்து வழுக்கிவிழச் செய்யும் (2)

நீங்கள் புதிர் மன்னரா?
குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை 15-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. 15க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.

வாஞ்சிநாதன்

ஏப்ரல் 2010 விடைகள்

© TamilOnline.com