அவல் உக்காரை
தேவையான பொருட்கள்
அவல் - 1 கிண்ணம்
வெல்லம் - 1 1/2 கிண்ணம்
வேர்க்கடலை - 1/4 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்
நெய் - 1/4 கிண்ணம்
ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 8
பச்சைக் கற்பூரம் - சிறிதளவு

செய்முறை
அவலை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். வேர்க்கடலையைச் சிவக்க வறுத்து மிக்சியில் இரண்டையும் அரைத்து வைத்துக் கொள்ளவும். தேங்காய்த் துருவலையும் சிவக்க வறுத்து மாவில் போடவும். வெல்லத்தைச் சிறிது தண்ணீர் விட்டுக் கரையவிட்டு வடிகட்டி மைக்ரோ வேவில் வைக்கவும். கொதி வந்ததும், அவலில் சிறிது கொதிக்கும் நீர் விட்டுப் பிசறி வெல்லத்துடன் சேர்த்துக் கலந்து நெய் விட்டுக் கொண்டே ஐந்து நிமிடங்கள் மைக்ரோவேவ் அவனில் வைத்து உதிர்உதிராகக் கிளறி தட்டில் பரவலாகக் கொட்டி உதிர்த்தாற்போற் கிளறி முந்திரி வறுத்துப் போடவும். ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம் போட்டுத் தேவையானால் மேலும் சிறிது நெய் சுட வைத்து ஊற்றலாம். இது மிகவும் சுவையான உக்காரை. செய்வதும் மிகச் சுலபம்.

தங்கம் ராமசாமி,
நியூஜெர்ஸி

© TamilOnline.com