கடலைப்பருப்பு - பயத்தம்பருப்பு - துவரம் பருப்பு உக்காரை
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு - 1/2 கிண்ணம்
பயத்தம்பருப்பு - 1/2 கிண்ணம்
துவரம் பருப்பு - 1/4 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்
முந்திரிப்பருப்பு - 10
ஏலக்காய் - 4
நெய் - 2 கிண்ணம்
பச்சைக் கற்பூரம் - தேவைக்கேற்ப

செய்முறை
பருப்புகளைத் தனித்தனியாக வெறும் வாணலியில் சிவக்க வறுத்து மிக்சியில் அரைத்து சலித்து நைசாக எடுத்து வைத்துக்கொள்ளவும். வெல்லத்தை ஒரு வாணலியில் கரைய விட்டு, மண்ணை வடிகட்டியபின், தேங்காயும் போட்டு பாகுப்பதம் வந்து கொதிக்கும் போது இறக்கவும்.

மாவைக் கொட்டி, கெட்டியாகப் பிசைந்து வைத்து, வாணலியில் நெய்விட்டுக் காய்ந்ததும், மாவைப் போட்டுக் கிளறி இடையிடையே நெய் விட்டுக் கிளறவும். உதிர்உதிராக வரும்போது இறக்கி முந்திரிப்பருப்பு, ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம் போட்டுக் கலந்து உபயோகிக்கவும். இதை நாள்பட வைத்துக் கொள்ளலாம். கெட்டுப் போகாது. மைக்ரோவேவ் அவனில் வைத்துச் சீக்கிரமாய்ச் செய்துவிடலாம்.

தங்கம் ராமசாமி,
நியூஜெர்ஸி

© TamilOnline.com