கடலைப்பருப்பு - பயத்தம்பருப்பு உக்காரை
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு - 1/2 கிண்ணம்
பயத்தம்பருப்பு - 1/2 கிண்ணம்
பாதாம் பருப்பு - 4
முந்திரிப் பருப்பு - 8
ஏலக்காய் - 4
தேங்காய்த்துருவல் - 1/2 கிண்ணம்
நெய் - 2 கிண்ணம்
வெல்லம் - 2 கிண்ணம்
பச்சைக் கற்பூரம் - சிறிதளவு

செய்முறை
பருப்புகள் இரண்டையும் வெறும் வாணலியில் வறுத்து, பருப்பு அளவுக்குத் தண்ணீர் விட்டு, நன்கு வேகவிட்டு, நீரை நன்கு வடியவிடவும். பாதாம் சிவக்க வறுத்துப் பொடி செய்து, பருப்பை மிக்சியில் நைசாகப் பொடியாக்கி அத்துடன் கலந்து வைக்கவும். வெல்லம், தேங்காய் போட்டு தண்ணீர் விட்டுக் கரைய விட்டுப் பொடியை அதில் போட்டுக் கெட்டியாய்ப் பிசைந்து வைக்கவும். வாணலியில் நெய்விட்டுக் காய்ந்தவுடன் பிசைந்து வைத்துள்ள மாவைப் போட்டு நெய் ஊற்றிக் கொண்டே கிளறவும். மைக்ரோவேவ் அவனில் வைத்தும் கிளறலாம். உதிர்ந்து பொலபொலவென வந்தவுடன் இறக்கி முந்திரி வறுத்துப் போட்டு ஏலக்காய், பச்சைக் கற்பூரம் போடவும். நெய் தேவையானால் காய்ச்சி ஊற்றிக் கொள்ளவும். இது சுவையான உக்காரை.

தங்கம் ராமசாமி,
நியூஜெர்ஸி

© TamilOnline.com