உங்கள் சமையல் திறமைக்கு ஒரு சவால். புற்றுநோய் அறக்கட்டளை (Cancer Institute Foundation) மீண்டும் 'கிச்சன் கிலாடி' போட்டியை அறிவித்துள்ளது.
சென்னையிலுள்ள புற்றுநோய் அறக்கட்டளை ஏழை எளியோருக்குக் குறைந்த செலவில் புற்றுநோய் சிகிச்சையைத் தரும் தொண்டு நிறுவனமாகும். புற்றுநோய் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளது. அதை ஆதரிப்பதற்கான அமெரிக்க நிறுவனம் Cancer Institute Foundation, Inc. ஒரு லாபநோக்கற்ற, வரிவிலக்குப் பெற்ற (501(C) (3) Tax ID: 20-1140049) அமைப்பாகும்.
போட்டி விவரங்கள் பின்வருமாறு: முதல் சுற்று: நாள்: மே 15, சனிக்கிழமை இடம்: லூசி ஸ்டெர்ன் கம்யூனிடி செண்டர், பாலோ ஆல்டோ, கலி.
இறுதிச் சுற்று: நாள்: மே 29, சனிக்கிழமை இடம்: யங் ஷெஃப் அகாடமி, சன்னிவேல், கலி.
முதல் சுற்றில் பங்கு பெற www.cifwia.org வலைதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அங்கே காணப்படும் நெறிமுறைக் கையேட்டுக்கு இணங்க மரக்கறி உணவைச் சமைத்து குறிப்பிட்டுள்ள வளாகத்துக்குக் கொண்டுவர வேண்டும். முதல் சுற்றுத் தயாரிப்புக்கான முக்கியப் பொருள்: கேரட்.
இதிலிருந்து 8 பேர் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அங்கே நடுவர்கள் முன்னிலையில் சமைக்க வேண்டும். சத்துணவு நிபுணர்கள், சமையல் நிபுணர்கள் மற்றும் பொதுமக்களில் சிலர் நடுவர் குழுவில் இருப்பர்.
உங்களுக்குச் சமைக்கத் தெரியாவிட்டாலும் வாருங்கள், சாப்பிட்டுப் பார்க்கவும், நடுவர் பணி ஆற்றவும்!
நுழைவுக்கட்டணம் கிடையாது.
மேலும் தகவலுக்கு இணையதளம்: www.cifwia.org தொலைபேசி: ஷோபா - 408-410-2570 |