'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்' புகழ் சுவாமி சுகபோதானந்தா அவர்கள் கலிஃபோர்னியா விரிகுடாப் பகுதியில் 2010 ஏப்ரல் 30, மே 1, 2 தேதிகளில் சொற்பொழிவுகளும் தொழில்பட்டறைகளும் நடத்த இருக்கிறார். ஏப்ரல் 16 முதல் 18 வரை ஆஷ்லன்ட், ஒரேகோனிலும் ஏப்ரல் 24, 25 தேதிகளில் பிட்ஸ்பெர்க், பென்சில்வேனியா கோயிலிலும் நிகழ்ச்சிகள் வழங்க இருக்கிறார். சான்பிரான்சிஸ்கோவில் ஏப்ரல் 30 முதல் மே 2 வரை நடைபெற இருக்கும் 3 நாள் 'New Living Expo'-வில் சுவாமிஜி அவர்கள் மே 1 ம் தேதி காலை 11 முதல் 1 மணிவரை 'New living with values of health, prosperity and happiness' என்பது பற்றிய தொழில்பட்டறையை நடத்த இருக்கிறார். இந்த Expo-வில் இலவசத் தொழில் பட்டறைகள் பல தலைப்புகளிலும் நடைபெற உள்ளன. உடல் நலம், செழிப்பு, மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கான அனைத்தையும் வழங்கும் ஒரு சிறிய கிராமமாக இந்த நிகழ்வு அமையும் என இதன் அமைப்பாளர் கென் கூறுகிறார். 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.
மேலும் விபரங்களுக்கு www.newlivingexpo.com என்ற வலைதளத்தை பார்க்கவும்.
இயந்திர மையம், காந்த மையம் என நமது வாழ்க்கையில் இரண்டு மையங்கள் உள்ளன. காந்த மையம் அமைதியான சூன்யமான மையம். நமது தொழில், பேச்சு மற்றும் இதர வெளிப்பாடுகள் இந்த மையத்திலிருந்து வருமானால் மேன்மை, தெளிவு, உயர்தரம் கிடைக்கிறது. இதுவே அமைதியின்றி அரக்கப் பரக்க இருக்கும் இயந்திர மையத்திலிருந்து இவை வருமானால் தரமும் தெளிவும் கிடைப்பதில்லை. பயம், வேதனை இவற்றை எப்படி நல்ல முறையில் கையாண்டு நமது வளர்ச்சிக்கு உபயோகப்படுத்த வேண்டும் என்பதை சுவாமிஜியின் தொழில்பட்டறை தெளிவாக்கி, காந்த மையத்திலிருந்து வாழ்வதற்கான கருவிகளும் வழங்கும்.
சுவாமிஜியின் சான் ஹோசே நிகழ்ச்சிகள்: நாள்: ஏப்ரல் 30 நேரம்: மாலை 7:45-9:15 சொற்பொழிவு: Surviving To Thriving in Today's World இடம்: Divine Science Center (1540 Hicks Avenue, San Jose, CA 95125) நாள்: மே 1 நேரம்: மாலை 4:00-8:00 தொழில்பட்டறை: Enhancing Life in difficult Times இடம்: Divine Science Center
நாள்: மே 2 நேரம்: காலை 10:00-12:00 தொழில்பட்டறை: Art of Empowering (பெற்றோர்களுக்கானது) இடம்: 12896, Viscaino Rd, Los Altos Hills, CA 94022
நேரம்: மதியம் 3:00-6:00 தொழில்பட்டறை: Art of becoming an inner and outer winner (இளையோருக்கானது, இருபாலருக்கும்) மேலதிகத் தகவலுக்கு: இணையதளம்: www.swamisukhabodhananda.org
தொடர்புகொள்ள: ஷகிலா: 408.425.2851, toshakila@gmail.com ரஜனி: 650.450.2662, bathinarajani@yahoo.com கமலா: 408.205.7035, vskamala@yahoo.com
ஷகிலா பானு, சன்னிவேல், கலி. |