பாம்புகள் நடிக்கும் 'நஞ்சுபுரம்'


சின்னத்திரை ராகவ் கதாநாயகனாக நடிக்க, மோனிகா கதாநாயகியாக நடித்து வரும் படம் 'நஞ்சுபுரம்'. இவர்களுடன் நூற்றுக்கணக்கான பாம்புகளும் படத்தில் நடித்துள்ளன. "பாம்புகளைப் பற்றி நம்மிடம் உள்ள நம்பிக்கைகளைத் தெளிவுபடுத்தும் விதமாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். இது வழக்கமான பழிவாங்கும் கதை கொண்ட பாம்புப் படங்களிலிருந்து மிக வித்தியாசமாக இருக்கும்" என்கிறார் படத்தின் இயக்குநர் சார்லஸ். கதாநாயகன் ராகவ் படத்திற்கு இசையும் அமைத்துள்ளார் என்பது கொசுறு தகவல்.

அரவிந்த்

© TamilOnline.com