ஒலி வடிவத்தில் கேட்க - Audio Readings by Saraswathi Thiyagarajan
மயிலுக்கு மலைகளில் சரணாலயம் - சின்னக் குருவிக்கு மரங்களில் சரணாலயம் மானுக்கு வனங்களில் சரணாலயம் - இந்த மனதுக்கு எவ்விடம் சரணாலயம்?
தவழ்கின்ற பருவத்தில் யாருக்குமே தாய்மடி ஒன்றுதான் சரணாலயம்! விளையாடும் தருணத்தில் யாராகிலும் கேளிக்கை ஒன்றே சரணாலயம்!
நேசிக்கும் நேரத்தில் நெஞ்சினுக்கே நெருங்கிய இதயங்கள் சரணாலயம்! அலைபாயும் நெஞ்சுக்கு இடமில்லையே அதற்கென ஏதொரு சரணாலயம்?
துடிக்கின்ற நெஞ்சுக்கு இரவுதன்னில் துயிலென்ற நல்லதோர் சரணாலயம்! அழுகின்ற நேரத்தில் துன்பம் வெல்ல ஆறுதல் தருமிடம் சரணாலயம்!
புகழ்கொள்ளும் பொழுதினில் நெஞ்சத்திற்கு புவிசூழ்ந்த வானமே சரணாலயம்! கணத்திற்கு கணம்மாறும் உள்ளத்திற்கே கண்டதுண்டோ யாரும் சரணாலயம்!
உதயகுமார் JR, கலி. |