தேவையான பொருட்கள் உருளைக் கிழங்கு - 2 கடலை மாவு - 2 கிண்ணம் உப்பு - தேவைக்கேற்ப மிளகுத்தூள் - சிறிதளவு டார்ட்டியா (Tortilla) - 1 பொட்டலம் வெண்ணெய் - 100 கிராம் கடுகு (மஸ்டர்டு) சாஸ் சீஸ் மிக்ஸ் ரேஞ்ச்
ஒலி வடிவத்தில் கேட்க - Audio Readings by Saraswathi Thiyagarajan
செய்முறை உருளைக் கிழங்கை மெல்லிய வட்டங்களாகச் சீவிக் கொள்ளவும். கடலை மாவை உப்பு, மிளகுத் தூள் போட்டு பஜ்ஜி மாவுபோல் கரைத்துக் கொள்ளவும். சீவிய உருளைக் கிழங்குகளை மாவில் தோய்த்துப் பொன்னிறமாக எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும். நான்-ஸ்டிக் பேனில் சிறிது வெண்ணெய் தடவி டார்டியாக்களை ஒவ்வொன்றாக இருபுறமும் சற்று மொறுமொறுக்க வாட்டி எடுக்கவும்.
வாட்டிய டார்டியாவில் சிறிது கடுகு (மஸ்டர்டு) சாஸ் தடவி இரண்டு உருளைக் கிழங்கு பஜ்ஜியை வைத்து அதன்மேல் சிறிது ரேஞ்ச் தடவி சுருட்டி வைக்கவும். மாலைச் சிற்றுண்டி மற்றும் பார்ட்டிகளில் களை கட்டவைக்கும் ஐட்டம் இது.
ஜயலக்ஷ்மி கணேசன், ட்ராய், மிச்சிகன் |