ஜனவரி 23, 2010 அன்று தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாட, டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கத்தினர், பிளிமத் மீட்டீங், பென்சில்வேனியாவில் உள்ள, கலோனியல் நடுநிலைப் பள்ளியில் கூடினர். தமிழ்ப் பள்ளி மாணவ மாணவியரின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. பின்னர் பல நடன நிகழ்சிகள் நடந்தன. இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்திய தேசீயக் கொடியை பாராட்டி ஒரு நடன நிகழ்ச்சி அமைந்திருந்தது.
தமிழ்ச் சங்கத்தின் மூத்த தலைவர்களான திரு. ஃப்ரான்சிஸ் ஜெயராஜ், திரு. அன்பு நடேஷ் மற்றும், மறைந்த திரு. திருஞானம் ஆகியோரை சங்கத் தலைவர் திரு. வேளாங்கண்ணி ராஜ் கௌரவித்தார். இயற்கைச் சீற்றதிற்கு பலியான ஹைடி நாட்டு மக்களுக்கு நிகழ்ச்சியின் போது நிதி திரட்டப்பட்டது. பசுமை விழிப்புணர்ச்சியை இளைய சமுதாயத்திடையே ஏற்படுத்த 'Go Green' போட்டியில் மாணவ மாணவியர் பங்கேற்றனர். சிவாஜி கணேசன் கலை மன்றத்தார் வழங்கிய 'சங்கல்பம்' என்ற மேடை நாடகம் செவிக்கு நல்ல உணவாக அமைந்தது.
ஜானகி வெங்கடேஸ்வரன், பென்சில்வேனியா |