அனுஷா சுந்தர் பரதநாட்டிய அரங்கேற்றம்


ஜனவரி 30௦, 2010 அன்று அனுஷா சுந்தரின் பரதநாட்டிய அரங்கேற்றம் சன்னிவேல் கலை வளாகத்தில் நடந்தேறியது. இவர் புஷ்பாஞ்சலி நாட்டியப் பள்ளியின் குரு மீனா லோகன் அவர்களின் மாணவி.

புஷ்பாஞ்சலியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. பிறகு சாவேரி ராக ஜதிஸ்வரம். அடுத்து 50 நிமிடம் விடாமல் ஆடிய வர்ணத்தில் முகபாவனையும், அபிநயங்களும் வெகு அழகு. இடைவேளைக்குப் பிறகு 'ஆடும் தெய்வம் அருள்வாய்' என்ற பாட்டுக்கு ஆடியது அருமை. பஸந்த் பஹார் ராகத் தில்லானாவுக்கு விறுவிறுப்பாக ஆடியது பார்க்க ஆனந்தம். திருப்பாவைக்கு அனுஷா ஆடியதை குரு மீனா லோகன், அவளை “ஆண்டாளாகவே இருந்தாள்" எனச் சொல்லிப் பாராட்டியதோடு 'நாட்டியக் கலையரசி' எனப் பட்டமும் தந்தார்.

பதின்மூன்று வயதான அனுஷா சுந்தர் சேலஞ்சர் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார்.

திருமதி மீனா லோகன் (நட்டுவாங்கம்), திருமதி ஜெயந்தி உமேஷ் (பாட்டு), திரு ரவீந்திர பாரதி (மிருதங்கம்), திருமதி லக்ஷ்மி பாலசுப்ரமண்யா (வயலின்) ஆகியோரின் ஆதரவில் அரங்கேற்றம் பரிமளித்தது.

தரா நேலகண்டி,
சன்னிவேல், கலி.

© TamilOnline.com