பாலாஜி திருக்கோவில் 6வது ஆண்டுவிழா


சன்னிவேல் பாலாஜி திருக்கோவிலில் மகா சிவராத்திரி 4 நாள் விழாவின் தொடக்க நாளாக அமைந்தது. பிப்ரவரி 11 காலை 6 மணிக்குத் தொடங்கி 12ம் தேதி அதே நேரம்வரை 3 மணிநேர இடைவெளிக்கு ஒரு ருத்ராபிஷேகம் என மொத்தம் 9 ருத்ராபிஷேகங்களை சுவாமி நாராயணானந்தா செய்தார்.

இதனைத் தொடர்ந்து, மகாலட்சுமி, பாலாஜி திருவுருவங்கள் கோவிலில் நிறுவப்பட்ட 6வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. 11ம் தேதி, வியாழன் இரவில் பாலாஜி தீக்ஷா பூஜையைத் தொடர்ந்து ஞாயிறுவரை தினமும் கொண்டாட்டம் தொடர்ந்தது. விநாயகருக்கு வியாழனன்று புதிய திருவாச்சி நிறுவப்பட்டு, பூஜைகள் நடந்தன. வெள்ளியன்று மாலை நவக்கிரஹ பூஜை, மகாலட்சுமி அபிஷேகம் ஆகியவை நடந்ததோடு, மகாலட்சுமிக்கும் ஒரு புதிய திருவாச்சி நிறுவப்பட்டது.

சனிக்கிழமை, பாலாஜி சுப்ரபாதம், தியானம், பாலாஜிக்கு 108 கலச அபிஷேகம் ஆகியவை நடந்தேறின. அன்று பாலாஜி திருவுருவத்துக்குப் புதிய திருவாச்சி ஒன்று நிறுவப்பட்டது. ஞாயிறன்று வாசவி பூஜை, பாலாஜிக்கு சஹஸ்ரநாம பூஜை ஆகியவை நடத்தப்பட்டன.

வரவிருக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி அறிய
இணையதளம்: www.balajitemple.net
தொலைபேசி: (408) 203-1036.

© TamilOnline.com