இந்திய நுண்கலைக் கழகம், சான் டியேகோ 3வது வருடாந்திரக் கலைவிழா
2010 மார்ச் 25 முதல் 28 வரையில் சான் டியேகோவின் இந்திய நுண்கலைக் கழகம் (Indian Fine Arts Academy of San Diego) தனது மூன்றாவது வருடாந்திர இந்திய இசை மற்றும் நடன விழாவை நடத்தவுள்ளது. 25, 26 தேதிகளில் மாலை நேரத்திலும், 27, 28 தேதிகளில் முழுநாளும் இந்த விழா நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இதில் பங்கேற்பதற்காக 28 வித்வான்களுக்கு மேல் இந்தியாவிலிருந்து வரவுள்ளனர். நூற்றுக்கு மேற்பட்ட சிறாரும் பங்கேற்பர். விழாவில் குரலிசைக் கச்சேரிகள் தவிர சிதார், புல்லாங்குழல், நாதஸ்வரம், மாண்டலின், வீணை ஆகிய வாத்திய இசையும் ஒடிஸி, பரதநாட்டியம் ஆகிய நடனவகைகளும் இடம்பெறும். இவை போதாதென்றால் இந்தியாவின் பல்வேறு வகை உணவுகளும் விழா நாட்களில் அரங்கில் சுவைக்கக் கிடைக்கும். விழாவை ஏறக்குறைய 5000 பேர் கண்டுகளிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் மேற்குக் கரையில் நடக்கும் இந்தியக் கலைவிழாக்களில் இது மிகப் பெரியதாகும்.

இணையதளம்: indianfinearts.org

மேலும் தகவலுக்கு:
சேகர் விஸ்வநாதன்: shekar.viswanathan@gmail.com
திவ்ய தேவகுப்தபு: divyabhinaya@yahoo.com

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com