ஆதி நடிக்கும் அய்யனார்
'மிருகம்' படத்தில் நடித்த ஆதி கதாநாயகனாக நடிக்கும் புதியபடம் 'அய்யனார்'. இதில் கதாநாகியாக வால்மீகி படத்தில் நடித்த மீராநந்த‌ன் நடிக்கிறார். இவர்களுடன் சந்தானம், சூரி, சரண்யா,​​ சுசித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பி.எல்.தேனப்பன் இப்படத்தைத் தயாரிக்கிறார். திரைப்படக் கல்லூரி மாணவர் ராஜமித்ரன் இயக்க, சேது ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசையமைக்கிறார். ஊரே மெச்சும் ஒரு இளைஞனை அவன் குடும்பத்தார் வெறுத்து ஒதுக்குகிறார்கள்.​ அதற்கான காரணம் என்ன என்பதுதான் படத்தின் கதை.

அரவிந்த்

© TamilOnline.com