மார்ச் 2010: குறுக்கெழுத்துப் புதிர்
குறுக்காக
5. வானத்தைப் போன்று அப்பாவியாய் நடித்து ஏமாற்றுபவள் (2)
6. முன்கூட்டியே தீர்மானித்த வகையில் வசைபாடக் கற்றுக் கொள் (6)
7. மும்பைப் பகுதியில் பெரிய நதி சிருங்கேரியில் ஓடுவது (4)
8. அருகில் குறைவாக நறுமணம் தரும் (3)
9. பொய்ச்செய்தி முளையிலே கிள்ள அவசரச் செய்திக்குப் பயன்படும் (3)
11. ஆம்பல் காற்றுக்கு வளையக் கிடைத்தது (3)
13. திருடன் ஆடுமிடத்து சரஸ்வதி (4)
16 தேய்ந்து சிதைந்த எளிமைக் கருடா உழவுக்குப் பயன்படாது (6)
17. சீதைக்கு ராமன் எழுந்தருளிய ஊர் (2)

நெடுக்காக
1. அடிபட்டதால் வரும் துன்பம் துயரம் பாதியாக்கி மேலே செல்ல வைக்கும் மாபெரும் ஆற்றல் கொண்டது (4)
2. மரியாதை தராத நிலவு தக்கார் தேய்ந்து சிதைந்தது (5)
3. கேட்டுப் பெற்ற நடுக்கடல் ஆயுதம் பிளக்கும் (3)
4. சுழி படர்ந்த தலைகொண்டு தியானத்தால் சக்தியடைந்தவன் பாவி (என்று இலங்கையில் சொல்வர்) (4)
10. பின் புத்தி விலை அதிகம் என்றாலும் சுவை அலுக்காது (5)
12. செழுமை சூழ்ந்த தெரு முனை உயர்ந்தோங்கும் (4)
14. இளைஞன் வான் சென்று உருக்குலைந்து பலி (3)
15. தானியத்தைக் கட்டிவைக்க உதவும் நொண்டியானால் பொய் (4)

நீங்கள் புதிர் மன்னரா?
குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை 15-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. 15க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.

வாஞ்சிநாதன்

பிப்ரவரி 2010 விடைகள்:

© TamilOnline.com