தேவையான பொருட்கள் ஓட்ஸ் - 2 கிண்ணம் வெங்காயம் (நறுக்கியது) - 1 கிண்ணம் பச்சை மிளகாய் - 5 இஞ்சி - சிறிதளவு கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி பெருங்காயம் - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு எலுமிச்சம் பழம் - பாதி உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - தாளிக்க
செய்முறை ஓட்ஸை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தையும் போட்டு நன்றாக வதக்கி 3/4 கிண்ணம் தண்ணீர் விட்டு உப்பும் போடவும். நீர் தளதளவெனக் கொதிக்கும் போது ஓட்ஸைப் போட்டுக் கிளறி நன்கு வெந்ததும் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டுச் சுருள வதக்கி எடுத்து வைத்து எலுமிச்சம் மூடியைப் பிழிந்து நன்றாகக் கிளறிச் சாப்பிடவும். உப்புமா மிகவும் நன்றாக இருக்கும். தொட்டுக் கொள்ள தேங்காய்ச் சட்னி, தக்காளிச் சட்னி இருந்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
பின்குறிப்பு: ஓட்ஸ், தண்ணீர் அதிகம் தாங்காது. கவனமாகச் சேர்த்துச் செய்யவும். மிக்ஸருடன் சேர்த்துச் செய்யலாம். கட்லெட்டும் ஓட்ஸில் செய்யலாம்.
தங்கம் ராமசாமி, நியூஜெர்ஸி |