2009 டிசம்பர் 10 முதல் 13 வரை கலிபோர்னியாவின் சன்னிவேல் நகரத்தில் உள்ள ஸ்ரீ சனாதன தர்ம கேந்திரத்தில், ஸ்ரீஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான ஸ்ரீ ராமானுஜம் அவர்களின் சொற்பொழிவு தொடர்ந்து நடைபெற்றது. 'குரு-கல்பதரு-ஒரு சிந்தனை', 'தினம் தினம் ஆன்மீகச் சிந்தனைகள்', 'நாம மஹிமை' ஆகிய தலைப்புகளில் சொற்பொழிவாற்றினார். இந்த நிகழ்ச்சியை குளோபல் ஆர்கனைசேஷன் ஃபார் டிவினிடி அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
முதல் நாள், ஸ்ரீ ராமானுஜர் மிகவும் அழகாக, குருவானவர் தந்தையின் கண்டிப்புடன் கலந்த தாயின் அரவணைப்புப் போல் தன் பக்தர்களுக்கு தனது அன்புடன் கலந்த ஆசிகளை அருளுகிறார் என்றார். இரண்டாம் நாள் பேசுகையில், பற்றற்ற வாழ்க்கை முறையே மிகச் சிறந்தது என்றும், அதற்கு சத்சங்கமே சிறந்தது என்றும், அதன் மூலமே மனதானது இறைவனிடம் லயப்படும் என்றார். இறுதி நாள் தெய்வீகச் சிந்தனைகள் மற்றும் அதன் ஆற்றல் பற்றி விவரித்தார். சத், சித் ஆனந்தம் என்பது ஆன்மீக உணர்வின் முக்கோணம். இவை பக்தி உணர்வினைத் தட்டி எழுப்பும். இவை நமக்குக் கிடைத்துள்ள அறிய, எளிய மந்திரத்தால் கிடைக்கும். இந்த மந்திரம், பக்தி உணர்வினைத் தூண்டும் என்றார்.
சன்னிவேல் சத்சங்கம் தினமும் 50 பேர்களுடன் நடைபெற்றது. சத்சங்கம் தினமும் 11முறை மகாமந்திர உச்சரிப்புடன் நிறைவுபெற்றது. ஸ்ரீ ராமானுஜர் குருவின் புகழையும், தெய்வீகச் சிந்தனைகளையும் பல நாடுகளுக்கும் சென்று பரவச் செய்துள்ளார்.
மேலும் தகவலறிய: www.godivinity.org
ரம்யா, பத்மா வெங்கட்ரமணி |