லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் மகாருத்ரம்

2010 ஜனவரி 17 முதல் 24 வரை சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் உள்ள லிவர்மோர் சிவ-விஷ்ணு கோவிலில் மகாருத்ர வேள்வி கொண்டாடபட்டது. இது உலக அமைதி, மனிதகுல நன்மை, பக்தர்களின் குடும்ப நலன் ஆகியவற்றுக்காக நிகழ்த்தப்பட்டது.

ருத்ர உச்சாடனம் 1. ஸ்ரீருத்ரம் 2. ஏகாதசருத்ரம் 3. மகாருத்ரம் 4. அதிருத்ரம் என வ்குக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கான கணக்கு பின்வருமாறு: ஸ்ரீருத்ரம் நமகப் பகுதியை ஒருமுறை முழுமையாக ஓதி, பின்னர் சமகப் பகுதியின் 11 பிரிவுகளையும் ஓதுதல் ஆகும். பதினோரு முறை நமகப் பகுதியை உச்சாடனம் செய்து ஒவ்வொரு முறையும் சமகத்தின் முதல் இரண்டு பாடல்களை ஓதுதல் ஏகாதச ருத்ரம் ஆகும். பதினோரு முறை ஏகாதச ருத்ர உச்சாடனம் செய்தல் என்பது ஓர் இலகு ருத்ரம் எனப்படும் (121 முறை). பதினோரு புரோகிதர்களைக்கொண்டு ஒவ்வொருவரும், ஒரே சமயத்தில் பதினோரு முறை உச்சாடனம் செய்வது இதற்கான முறை ஆகும். பதினோரு இலகு ருத்ரம் முழுமையடைந்தால் (1331 முறை) அது மகாருத்ரம். பதினொரு மகாருத்ரம் (14641 முறை) முழுமை பெற்றால் அது அதிருத்ரம் ஆகும்.

டாக்டர் கோமதி லக்ஷ்மணசுவாமி, பி.எச்டி.

© TamilOnline.com