இளையராகம் குழுவினரின் 'சங்கீத மேகம்'
வளைகுடாப் பகுதியின் புதிய இசைக்குரல் 'இளைய ராகம்' தன்னுடைய தலைப்பிரசவமான 'சங்கீத மேகம்' என்னும் இசை நிகழ்ச்சியை இசைஞானி இளையராஜாவுக்குக் காணிக்கையாக வழங்க உள்ளது. பிப்ரவரி 13, 2010 அன்று மாலை 5 மணிக்கு இது கேம்பெல் ஹெரிடேஜ் அரங்கில் நடைபெறும்.

காலத்துக்கு ஏற்றவாறு பாடல்களும், இசைக்கப்படும் விதமும் மாறி இருந்தாலும், நல்ல இசையை ரசிகர்கள் எப்போதும் போற்றி வந்திருக்கிறார்கள். தீராத இசை தாகமும், பிரியமும் கொண்ட இளைய ராகத்தினர், இசை ஞானியின் பதிவுகளிலிருந்து சிலவற்றைத் தேர்வு செய்து, அதனை உங்கள் செவிகளுக்கு விருந்தாக்க முற்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் வரும் லாப நிதியை, இளைய ராகம், ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக புறுநோய் சிகிச்சை அளிக்கும் புற்றுநோய்

கழகத்திற்கு (Cancer Institute Foundation) அளிக்க உள்ளது.

நாள்: சனிக்கிழமை, பிப்ரவரி 13, 2010
நேரம்: மாலை 5:00 மணி
இடம்: Campbell Heritage Theater
1 W, Campbell Avenue
Campbell, CA 95008
நுழைவுச்சீட்டு: $12 (Kids under 8 free)
தொடர்புக்கு: 408.866.2700 (Box Office)
இணையதளம்: www.ilayaragam.com
மின்னஞ்சல்: tickets@ilayaragam.com

கண்ணன்,
மில்பிடாஸ், கலிபோர்னியா

© TamilOnline.com