டென்னசி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
பிப்ரவரி 6, 2010, சனிக்கிழமை அன்று மாலை 6.30 அளவில் பொங்கல் விழாவைக் கொண்டாட டென்னசி தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. நிகழ்ச்சியின் பிரதான அம்சமாக சி.எஸ். ஐங்கரன் குழுவினரின் இன்னிசை நடைபெற உள்ளது.

சி.எஸ். ஐங்கரன் தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற பாடகர்களுடன் மேடையில் இணைந்து பாடியிருக்கிறார். பல மொழிகளிலும் பாடும் திறன் படைத்த இவர், 60களிலிருந்து இன்றுவரை புகழ்பெற்ற பாடல்களை அனிதா கிருஷ்ணன் மற்றும் தனது இசைக்குழுவுடன் அளிக்கவுள்ளார்.

நாள்: பிப்ரவரி 6, 2010
இடம்: நேஷ்வில் விநாயகர் ஆலயத்தின் கலையரங்கம்
தொடர்புக்கு:
தொலைபேசி: 615.397.2066
இணையதளம்: www.tenntamil.org
மின்னஞ்சல்: secretary@tenntamil.org



© TamilOnline.com