வெந்தய இட்டலி
இந்த இட்டலிக்கு உளுத்தம் பருப்பு தேவையில்லை. எனவே இது சற்றுக் கசப்பாகத்தான் இருக்கும்.

தேவையான பொருட்கள்

இட்டலி அரிசி - 1 1/4 கிண்ணம்
வெந்தயம் - 1/4 கிண்ணம்

செய்முறை

இரண்டையும் தனித்தனியாக 6 மணி நேரம் ஊறவைத்து அரைத்து, தேவையான உப்புடன் கலந்து இரவே மூடிவைக்கவும்.
காலையில் சாதாரண இட்டலி செய்வது போலச் செய்யலாம்.
இதைத் தவிர வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து வெல்லம் நெய் சேர்த்து வெந்தயக் களியாகவும் செய்வர்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com