முதல் காதல் மழை
நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மகேந்திரன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'முதல் காதல் மழை'. இதில் நடிகை சுவாதிகா கதாநாயகியாக நடிக்கிறார். ராஜேஷ், நிழல்கள் ரவி, வனிதா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தாசரி நாராயணராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதுவண்ணன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி இயக்குகிறார். பாடல்களை வைரமுத்து, யுகபாரதி எழுத, சாணக்யா இசையமைக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com