365 காதல் கடிதங்கள்
மந்த்ரா-அருண்குமாரை வைத்து 'ப்ரியம்' படத்தை இயக்கிய பாண்டியன், தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்கி வரும் படம் 365 காதல் கடிதங்கள். பள்ளிப்பருவத்தில் வரும் காதல் உண்மையான காதலா, இல்லை இனக்கவர்ச்சியா என்ற கருவை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் கதாநாயகர்களாக யுவ கார்த்திக் மற்றும் அஜய் என்ற புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். நாயகியாக தூத்துக்குடி படத்தில் நடித்த கார்த்திகா நடிக்கிறார். பாடலளை யுரேகா எழுத, பால்.ஜே. இசையமைக்கிறார். விஷன் 21 கிரியேட்டிவ் டீம் ஒர்க்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

அரவிந்த்

© TamilOnline.com