அதிரடி மனிதன் 'அழுக்கன்'
சந்தர்ப்ப சூழ்நிலையால் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் போன்ற சமூக விரோதச் செயல்களைச் செய்துவரும் இளைஞன், நல்லவனாகத் திருந்தி வாழ ஆசைப்படுகிறான். அவனைச் சமூகம் அனுமதித்ததா என்பதை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படம் 'அழுக்கன்'. ஒமேஷ் கேசார் என்பவர் கதாநாயகனாக நடிப்பதுடன், படத்தைத் தயாரித்து இயக்குகிறார். தந்தை, மகன், முதியவர் என்று மூன்று வேடங்களில் நடிக்கும் அவருக்கு ஜோடியாக மலேசியாவைச் சேர்ந்த லீலா, சஞ்ஜீதா ஆகியோர் அறிமுகம் ஆகிறார்கள். கபிலன் பாடல்களை எழுதுகிறார். கே. சிருஷ்டி ஒளிப்பதிவு செய்ய, விஸ்வமாலிக் இசையமைக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com