தம்பிக்கோட்டை
'சித்திரம் பேசுதடி', 'அஞ்சாதே' போன்ற வெற்றிப் படங்களில் நடித்த நரேன் கதாநாயகனாக நடிக்கும் படம் தம்பிக்கோட்டை. நாயகியாக பூனம் பாஜ்வா நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, மீனா, சங்கீதா, சந்தானம், கஞ்சா கருப்பு, எம்.எஸ். பாஸ்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜெயம் ராஜாவிடம் இணை இயக்குனராக இருந்த அம்மு ரமேஷ் இப்படத்தை இயக்குகிறார். தேவர் பிலிம்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஆர்.கே. சுரேஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார் என்பது கொசுறு தகவல்.

அரவிந்த்

© TamilOnline.com