டாக்டர்: போன தடவை நீங்க கொடுத்த செக் திரும்பி வந்திடுச்சு. நோயாளி: நீங்க குணப்படுத்தினதா சொன்ன வயித்து வலியும்தான்.
*****
"டாக்டர், பையன் லட்டை முழுங்கிட்டான். ஆபரேஷன் பண்ணியாவது வெளியில எடுத்திடுங்க." "லட்டுக்கு ஏன் இந்தப் பயம் பயப்படறீங்க?" "ஐயோ அது வேட்பாளர் தந்த லட்டு. உள்ளே வைர மோதிரம் வெச்சிருக்காறாம்." அதிரை யூசஃப், சன்னிவேல், கலி.
*****
இலக்கணத் தாளில் ஒரு கேள்வி: "ஓர் அழகான பெண் சாலையில் நடந்து போகிறாள்" - இதை வியப்புச் சொற்றொடராக மாற்றுக. பதில்: "வாவ்!"
*****
"கட்டுடல் பயில்வான் கட்டில்ல இருந்து கீழே விழுந்துட்டார்..." "அப்புறம்?" "ஆஸ்பத்திரியில ‘கட்டு' உடலோட இருக்கார்!" அதிரை யூசுப், சன்னிவேல்
*****
ஒருவன்: சூரியனா, டெல்லியா, எது அதிக தூரம்? மற்றவன்: உன் கண்ணுக்கு டெல்லி தெரியுதா?
*****
என்னங்க "இன்றைய கூட்டு"ன்னு தலைப்பு எழுதி இருக்கீங்க. கீழே என்ன கூட்டுன்னு எழுதலே. இது என்ன ஓட்டல்?
இது ஓட்டல் இல்ல. கட்சி அலுவலகம். இன்னிக்கு எந்த கட்சியோட கூட்டணில இருக்கோம்னு எங்களுக்குத் தெரிஞ்ச உடனே எழுதி வைக்கறோம். எல்லே சுவாமிநாதன்
***** |