உங்கள் ஐஃபோன் உங்கள் குழந்தைகள் கையில் இருந்தால் அது ஏதேனும் கேம் விளையாடுவதற்காகத்தான் இருக்கும். சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அதைப் பொறுத்துக் கொள்வீர்கள். ஆனால், இப்போது அவர்கள் விளையாட்டையே கல்விப் பயிற்சியாக்கலாம். Math Magic, Word Magic, Match Magic, Math Series, Sight Wrods and Digraphs, Count Magic, Think Big, Dictation என்று விதவிதமான சுவாரசியமான விளையாட்டுகளை வடிவமைத்துள்ளார் பாண்டுரங்கன் செந்தில். அவற்றைப் பார்க்க: www.anusen.com. கொஞ்சம் விளையாட்டு எப்படி என்று பார்க்க: www.youtube.com
சரியான விடைகளைக் கொடுத்தால் கேட்கும் சபாஷ் குரல் அவரது 5 வயது மகள் அபினயாவுடையது! "ஃப்ளாஷ் கார்டுகளைவிட விலை குறைவு, ஆனால் இதில் விளையாடும் என் குழந்தை பள்ளியில் அதிக மார்க்கு வாங்குகிறார்" என்று பயன்படுத்திப் பார்த்த சிலர் கூறியுள்ளனர். குழந்தைகளும் இதில் விளையாடுவது கற்பதைச் சுவையான தாக்குவதாகக் கூறுகின்றனர்.
ஆப்பிள் இணையதளத்துக்குப் போய் இறக்கித்தான் பாருங்களேன். |