கச்சேரிக்காக மேடையில ஏறி மைக் டெஸ்ட் பண்றப்பவே, 'கிருஷ்ணா! ராகவேந்திரசாமி! பாபா! எல்லாரும் வந்து உக்காந்துட்டீங்களா?'ன்னு மானசீகமா கேட்டுப்பேன். அப்புறம் எங்க அப்பா, அம்மா. அப்புறம் என் மாமனார். அவர் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணியிருக்கார். நாம நம்பிக்கை வைக்கற எல்லாருமே நமக்குக் கடவுள்தான். அதனால அவங்களை எல்லாம் கூப்பிட்டு முன்னால உக்கார வச்சுடறது. அதுக்கப்புறம் ஏறி உக்காந்தாச்சுன்னா, யாரையும் நான் பாக்கறதே கிடையாது. அதைப் பத்தி நான் கவலைப்படறதும் கிடையாது. 'இதுதான் எனக்குத் தெரியும். இவ்வளவுதான் எனக்குத் தெரியும். இதை நான் உங்களுக்குப் பாடறேன்'னு நான் தைரியமா பாடிட்டு வந்துடுவேன்.
- அருணா சாய்ராம் |