என்னோட பனிரெண்டாவது வயசுலே எனக்கு ஒரு கச்சேரி சான்ஸ் வந்தது. ஆனால் அப்பா அதுக்கு தீர்மானமா மறுத்துட்டார். அப்போ, 'என்னடா இது! நம்மைப் போட்டு இப்படி அமுக்கறாரே!'னு எனக்குக் கோவம் கூட வந்ததுண்டு! என் பதினஞ்சாவது வயசுல, பக்கத்திலிருந்த கோயில் ஒண்ணுலதான் நான் முதல் முதல்ல மேடையேறிப் பாட அப்பா அனுமதிச்சார். இப்போ யோசிச்சுப் பார்த்தா, இதெல்லாம் ரொம்பச் சரியான ஆலோசனைன்னு தோணுது. ஒருவேளை பனிரெண்டு வயசுலேயே நான் கச்சேரி செய்ய ஆரம்பிச்சிருந்தேன்னா... குழந்தைப் பிராயம்கிறதாலேயே எக்கச்சக்கமா பப்ளிசிடி கிடைச்சு... அப்புறம் பதினஞ்சு வயசுக்குள்ளேயே காணாமல் போயிருப்பேன்...
- கே.ஜே. ஜேசுதாஸ் |