தேவையான பொருட்கள்
உருளைக் கிழங்கு - 2 வெந்தயக் கீரை - 1/2 கிண்ணம் மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி மிளகாய்ப் பொடி - தேவைக்கேற்ப உப்பு - தேவைக்கேற்ப பூண்டு (நறுக்கியது) - 1/2 தேக்கரண்டி கரம் மசாலாத் தூள்- 1/2 தேக்கரண்டி ஆலிவ் ஆயில் அல்லது சமையல் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
செய்முறை
உருளைக்கிழங்கைப் பொடிப்பொடியாக நறுக்கவும். தோல் சீவ வேண்டியதில்லை. எண்ணெயை மிதமான தீயில் வைத்துக் காய்ந்தபின் பூண்டு போட்டு வதக்கவும். அதில் உருளைக்கிழங்கு, மஞசள் பொடி, உப்பு ஆகியவற்றைப் போட்டுத் தீயாமல் வதக்கவும். பாதி வெந்த பின்னர் காரப் பொடியும் கீரையும் சேர்த்து நன்கு வெந்தபின்னர் கரம் மசாலா சேர்த்துச் சுருளக் கிளறி இறக்கவும். இதைச் சாதம், சப்பாத்தி ஆகியவற்றுடன் சாப்பிடலாம். பூண்டு இல்லாமலும் செய்யலாம்.
சரஸ்வதி தியாகராஜன் |