1. அது ஒரு மூன்று இலக்க எண். முதல் இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 15; இரண்டாம் மற்றும் மூன்றாம் எண்களின் கூட்டுத்தொகை 17; முதல் மற்றும் மூன்றாம் எண்களின் கூட்டுத் தொகை = 16. என்றால் அந்த எண்கள் எவை?
2. ராமுவிடம் 500 டாலர் இருந்தது. அதை அவன் தன் நண்பர்கள் சிலருக்கு $110 வீதமும், சிலருக்கு $130 வீதமும் அன்பளிப்பாகக் கொடுத்தான். $110 பெற்றவர்கள் எத்தனை, $130 பெற்றவர் கள் எத்தனை?
3. லதாவிடம் சில சாக்லேட்டுகள் இருந்தன. ராதாவிடமும் சில சாக்லேட்டுகள் இருந்தன. லதா தன்னிடமிருந்து ஏழு சாக்லேட்டுகளை ராதாவிற்குக் கொடுத்தால், ராதாவிடம் இருக்கும் சாக்லேட்டுகளின் எண்ணிக்கை லதாவிடமிருப்பதைப் போல் இரு மடங்காகிறது. அதுபோல ராதா தன்னிடமிருந்து ஏழு சாக்லேட்டுக்களை லதாவிற்குக் கொடுத்தால் இருவரது சாக்லேட்டுகளின் எண்ணிகையும் சமமாகி விடுகிறது. அப்படியானால் இருவரிடமும் இருந்த சாக்லேட்டுகளின் எண்ணிக்கை என்ன?
4. கடைக்குச் சென்ற கீதா $1000 கொடுத்து நூறு பொருட்களை வாங்கினாள். ஒரு வாட்ச் $100; ஒரு பேண்ட் $30; ஒரு கைக் குட்டை $5. அவள் வாங்கிய பொருள் ஒவ்வொன்றின் எண்ணிக்கை என்ன?
5. 682 + 892 + 962; 862+ 982 + 692 - இரண்டுக்கும் இடையே என்ன வித்தியாசம்?
விடைகள்1. அந்த எண்கள் 7,8,9
2. ராமுவிடம் இருந்த தொகை = $500.00
1 x 110 = 110.00
3 x 130 = 390.00
= 500.00
ஆக $110 டாலர் ஒருவருக்கும், $130 டாலர் மூவருக்கும் என்று ராமு பிரித்துக் கொடுத்தான்.
3. 35, 49
லதாவிடம் இருந்த சாக்லேட்டுகள் = 35; அதிலிருந்து 7 சாக்லேட்டுகளை ராதாவிற்கு அளிக்க = 35 - 7 = 28;
ராதாவிடம் இருப்பது 49 சாக்லேட்டுகள். லதா அளித்த ஏழைக் கூட்டினால் = 49 + 7 = 56; இது லதாவிடம் இருப்பதைப் போல் இரு மடங்கு ஆகிறது = 2 x 28= 56;
ராதாவிடம் இருப்பதிலிருந்து ஏழைக் கழித்தால் = 49 - 7 = 35. லதாவிடம் இருக்கும் சாக்லேட்டுகளின் எண்ணிக்கை = 35. இருவரது சாக்லேட்டுகளின் எண்ணிகையும் சமமாகி விடுகிறது.
ஆகவே லதாவிடம் இருந்த சாக்லேட்டுகள் = 35; ராதாவிடம் இருந்த சாக்லேட்டுகள் 49.
4. 5 வாட்ச் = 5 x 100 = 500.00
1 பேண்ட் = 1 x 30 = 30.00
94 கைக்குட்டை = 94 x 5 = 470.00
100 பொருட்கள் = $1000.00
5. ஒரு வித்தியாசமுமில்லை
1.... 68 x 68 + 89 x 89 + 96 x 96 = 21761
2.... 86 x 86 + 98 x 98 + 69 x 69 = 21761
இரண்டு விடைகளும் சமம். ஆகவே வித்தியாசம் ஏதும் இல்லை.