மணக்க மணக்க மணத்தக்காளி குழம்பு
பச்சை மணத்தக்காளி குழம்பு

தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு - 50 கிராம்
துவரம் பருப்பு - 200 கிராம்
மணத்தக்காளி - 1/4 கிலோ
மிளகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 2
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
சாம்பார் மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1/2 கிண்ணம்
கொத்தமல்லி, கறிவேப்பிலை - 1/2 கிண்ணம்
வெல்லம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - 1/2 தேக்கரண்டி


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiyagarajan



செய்முறை:
வாணலியில் கடலை பருப்பு, துவரம் பருப்பு, மிளகு, வெந்தயம், மிளகாய், 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டுப் பொன்னிறமாக வறுக்கவும். இத்துடன் மணத்தக்காளிக் காயை வதக்கிப் போடவும். இதை அப்படியே குக்கரில் போட்டு 5, 6 சீழ்க்கை (அதாங்க, விசில்) அடித்ததும் நிறுத்தவும். சூடு ஆறியபின் மத்தால் நன்றாகக் கடையவும். அதனுடன் ஊற வைத்த புளியைக் கரைத்து ஊற்றவும். அதில் உப்பு, சாம்பார் மிளகாய்ப் பொடி, வெல்லம், மஞ்சள் தூள் போட்டு நன்றாகக் கொதிக்க விடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, வெங்காயத்தை நன்றாக வதக்கிப் போட்டுக் கொதிக்க விடவும். மிகச் சுவையானது. சுண்ணாம்புச் சத்து நிறைந்தது. இதே முறையில் பச்சை சுண்டைக்காயிலும் செய்யலாம்.

பானுமதி,
கூபர்டினோ, கலி.

© TamilOnline.com