தேவையான பொருட்கள்
சாப்பாட்டுப் பச்சரிசி - 1 கிண்ணம் பாசிப் பருப்பு - 3/4 கிண்ணம் தண்ணீர் - 4 கிண்ணம் வெந்தயக் கீரை (பொடியாக நறுக்கியது) - 1/4 கிண்ணம் உப்பு - தேவைக்கேற்ப மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை சீரகம் - 1 தேக்கரண்டி மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு ஆலிவ் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி நெய் - 2 தேக்கரண்டி இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி பச்சைமிளகாய் (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி முந்திரிப் பருப்பு - 8
செய்முறை
ஒரு பாத்திரத்தில் அரிசி, பருப்பு, வெந்தயக் கீரை, உப்பு, சீரகம், மஞ்சள் பொடி போடவும். ஆலிவ் எண்ணெய் விட்டு, கரண்டியால் அடி மேலாக எல்லாவற்றையும் கலக்கி மூடவும். கலவையைக் குக்கரில் 5 முறை சத்தம் வரும்வரை வேகவிட்டு அடுப்பை அணைக்கவும். நெய்யில் முந்திரிப்பருப்பைப் பொன்னிற மாக வறுத்துக் கொண்டு, அதில் மிளகுப் பொடி போட்டுப் பொரிந்த பின்பு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டுப் பொரித்து வைத்துக்கொள்ளவும். பிரஷர் அடங்கியபின் குக்கரைத் திறந்து, பொரித்து வைத்துள்ள பொருட்களைப் பொங்கலில் சேர்த்து அடி மேலாக மசித்துக் கிளறினால் வெந்தயக் கீரைப் பொங்கல் தயார்.
சரஸ்வதி தியாகராஜன் |