சான் டியேகோ தமிழ்ச் சங்கம் தீபாவளித் திருவிழா
அக்டோபர் 24, 2009 அன்று சாண்டியேகோ தமிழ்ச்சங்கம் தீபாவளியை முன்னிட்டு 'மெல்லிசை மழை' நிகழ்ச்சியை லாஸ் ஏஞ்சலஸ் நகரைச் சேர்ந்த 'ஆஷியானா' இசைக்குழுவினரின் உதவியோடு நடத்தினார்கள். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பழைய மற்றும் புதிய தமிழ்ப் பாடல்களின் இசைமழையில், சிறியவர்களோடு பெரியவர்களும் நனைந்து ஆடி மகிழ்ந்தனர்.
வந்திருந்தோருக்கும், நன்கொடையாளர்களருக்கும் பிறருக்கும் நன்றி நவின்று நிகழ்ச்சியை நிறைவு எய்தியது. பொங்கலுக்குச் சிறப்பானதொரு நிகழ்ச்சியை 2010 ஜனவரி மூன்றாம் வாரத்தில் நடத்தச் சங்கம் தற்போது ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்புவோர் தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: subashineevenkatesh@gmail.com

சான் டியேகோ தமிழ்ச்சங்கம்

© TamilOnline.com