கதிரி கோபால்நாத் சாக்ஸபோன் இசை
நவம்பர் 6, 2009 அன்று மில்வாக்கி HTW கலையரங்கில் பத்மஸ்ரீ கதிரிகோபால்நாத்தின் சாக்ஸபோன் இசைக் கச்சேரி நடந்தது. 'வாதாபி கணபதி'யுடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது. தொடர்ந்து, 'எந்தரோ மகானுபாவுரு', 'மோக்ஷமுகலதா' ஆகிய தியாகராஜ கீர்த்தனைகளை அற்புதமாக வாசித்தார். கன்னியாகுமரியின் வயலின், ஹரிகுமார் மிருதங்கமும் பலே ஜோர். அடுத்தடுத்து வாசித்த 'தீராத விளையாட்டுப் பிள்ளை', முருகன் மீதான துதிகள், மில்வாக்கி மக்களைக் கட்டிப் போட்டன. ஆலாபனை, நிரவல், கல்பனாச்வரம் யாவும் மிக நன்றாகக் கையாளப்பட்டன. தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என எல்லா மொழிப் பாடல்களையும் சிறப்பாக வாசித்தனர்.

அதிக விவரங்களுக்கு. wisindians.com

லலிதா வெங்கட்ராமன்,
மில்வாக்கி, விஸ்கான்சின்

© TamilOnline.com