நவம்பர் 7, 2009 அன்று கான்கார்ட் (மஸாசுசெட்ஸ்) தோரோ பள்ளியில் குரு அபர்ணா பாலாஜி அவர்களின் மாணாக்கர்கள் கர்நாடக சங்கீத சேர்ந்திசை நிகழ்ச்சி ஒன்றை வழங்கினார்கள். இதற்கு ஜி. விஜய் கணேஷ் (மிருதங்கம்), வித்யா ராமன் (வயலின்), பிரயுத் நடுதோட்டா (புல்லாங்குழல்), சௌந்தர்யா கணேஷ் (வீணை) ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் திரட்டப்பட்ட நிதி திருச்சியிலுள்ள ஹிந்து மிஷன் மருத்துவ மனையின் இலவச சேவைப் பணிகளுக்கு வழங்கப்பட்டது. திருச்சி தென்னூரில் இயங்கும் இந்த மருத்துவ மனை 20 படுக்கைகள் கொண்டது. இதன் செயல்பாடுகளுக்கு நிதி உதவ விரும்புவோர் 'Kanchi Kamakoti Seva Foundation USA' என்ற அமைப்புக்குக் காசோலைகளை அனுப்பலாம். உங்கள் இணைப்புக் கடிதத்தில் 'HMH, Trichy' என்று தவறாமல் குறிப்பிடுங்கள். இந்த அமைப்பு அமெரிக்காவில் வரிவிலக்குப் பெற்ற, லாபநோக்கற்ற, ஏழை எளியோருக்கு உதவும் அமைப்பாகும்.
காசோலை அனுப்ப வேண்டிய முகவரி: Rajesh Vaidheeswarran, 21 Stratton way, Northborough, MA 01532
மேலதிக விவரங்களுக்கு: மின்னஞ்சல்: kksfboston@gmail.com தொலைபேசி: 918-352-6244 அல்லது 918-3-KANCHI
இணையத்தில்: Raagamanjari 2009
செய்திக் குறிப்பில் இருந்து |