சம்ஹிதா கடியாலாவின் கச்சேரி
நவம்பர் 21, 2009 அன்று சம்ஹிதா கடியாலாவின் கர்நாடக சங்கீதக் கச்சேரி சன்னிவேல் சனாதன தர்ம கேந்திரத்தில் நடத்தப்பட்டது. Lotus கலை அமைப்பின் இளநிலைக் கலைஞர் பிரிவில் நடைபெற்றது இந்த மாதாந்திரக் கச்சேரி.

வசந்தா ராக வர்ணத்துடன் கச்சேரி துவங்கியது. 'சித்தி விநாயகம்' (ஷண்முகப்ரியா) கிருதி அடுத்து வந்தது. 'துளஸிதள முனசே' (மாயா மாளவம்) தொடர்ந்தது. பொருத்தமான ஆலாபனையுடன் கமக, பிருகா பிரயோகங்கள் ஸம்ஹிதாவின் குரல்வளத்துக்குச் சான்று பகர்ந்தன. அடுத்து குரு ஜெயஸ்ரீயின் 'சரசவாணி' சாஹித்யம், கல்பனா ஸ்வரங்களால் கரகோஷம் பெற்றது. புரந்தரதாசரின் 'வெங்கடாசல நிலையம்' (சிந்துபைரவி) பாடலோடு கச்சேரி நிறைவுற்றது. பக்கவாத்தியத் துணையாக வயலினில் ரங்க ஸ்ரீ வரதராஜனும் மிருதங்கத்தில் ரவீந்திர பாரதியும் சிறப்பாக வாசித்தனர்.

பத்தே வயதான சம்ஹிதா, சன்னிவேல் வெஸ்ட்வேலி துவக்கப்பள்ளியில் 3வது கிரேடு படிக்கிறார். மாணவ ஆலோசனைக் குழுவின் உபதலைவி. ஜான் ஹாப்கின்ஸ் யூத் டேலண்ட் அவார்டை கல்விச் சிறப்புக்காகப் பெற்றிருக்கிறார். சன்னிவேல் ஸ்ரீராம லலிதா கலா மந்திர் பள்ளித் தலைவி ஜெயஸ்ரீ வரதராஜன் அவர்களிடம் ஐந்து வயதில் கர்நாடக சங்கீதம் பயில ஆரம்பித்தார்.

ஸ்ரீ சுப்பிரமணியன் திருமணி கே

© TamilOnline.com