மிச்சிகன் தமிழ் சங்கம் கிறிஸ்துமஸ் விழா
டிசம்பர் 6, 2009 அன்று மிச்சிகன் தமிழ்ச் சங்கம் கிறிஸ்துமஸ் விழாவை பார்மிங்டன் ஹில்ஸ் காஸ்டிக் சென்டரில் சிறப்பாகக் கொண்டாடியது. சிறுவர் சிறுமியருக்கான மாறுவேடப் போட்டி, தம்பதியினர் பங்கேற்ற ஜோடிப்பொருத்தம் நிகழ்ச்சிகள் விழாவிற்குச் சுவை கூட்டின. கிறிஸ்துமஸ் தாத்தாவாக சுரேந்தர் அவர்கள் வேடமிட்டது சிறப்பாக இருந்தது.

இறுதியில், செயலாளர் விவேக் பேசுகையில் ஜோடிப் பொருத்தம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கற்பகம், பங்கேற்ற குழந்தைகள், நடுவராகப் பங்கேற்ற ஹரிஹரன், தேசிகன் ஆகியோருக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்தார். இந்த வருடச் செயற்குழு உறுப்பினர்கள், வரும் ஆண்டு பொறுப்பேற்கவிருக்கும் செயற்குழு உறுப்பினர்களுக்கு சங்க நடவடிக்கைகள் அனைத்தையும் அறங்காவலர் சதீஷ் சுப்பிரமணியத்தின் முன்னிலையில் ஒப்படைத்தனர்.

கல்பனா ஹரிஹரன்,
டெட்ராயிட், மிச்சிகன்.

© TamilOnline.com