தென்றல் வாசகளுக்கு 2010 ஆண்டு இனிதாகச் செல்ல வாழ்த்துகள். டிசம்பர் புதிருக்கு முப்பத்தைந்து வாசகர்கள் சரியான விடையைக் கண்டு அனுப்பி எனக்கு நல்ல புத்தாண்டுப் பரிசைத் தந்துவிட்டீர்கள். இம்மாதப் புதிரில் கொஞ்சமாவது கஷ்டப்பட்ட மாதிரி காட்டச் சற்றே தாமதமாக விடையை அனுப்பி என்னைக் கொஞ்சம் தேற்றுங்கள்!
குறுக்காக
5. உயர்ந்த காவல் கொண்ட இடம் பாரதத்தைக் கீறியவன் இருப்பான் (6)
6. தெய்வத்தைப் புலவர்கள் பாவையர் செவ்விதழ் என்பர் (2)
7. பெண்ணைத் துறந்த கனி கபிலரின் ராகம் (4)
9. கடைசியாகச் சொன்ன வம்பு பரப்பும் உலகம் (4)
10. சாமர்த்தியமாகத் தலை நுழைத்த விதம் வெறும் நடிப்பு (4)
12. அழை அதன் பிறகு கொஞ்சம் போனாலும் சிலம்பு ஓரம் (4)
13. பாதி உண்பது முதன்மையானதல்ல (2)
14. பின்னல் தலை நீங்கி மிஞ்ச தொலைவிலிருப்போரையும் தொடர்புகொள்ள உதவும் (6)
நெடுக்காக
1. தழைத்தோங்கி வளர்வதைக் கார்பன் டை ஆக்ஸைடு கக்குவான் எனலாம் (2)
2. மூன்று ஸ்வரங்களுடன் அறிவு கெட்ட கோமதி என்னுடன் பிறந்தாள் (4)
3. கடைகளில் வியாபாரத்தை நிறுத்தி மார்பில் உயிரை எடுக்கும் (4)
4. நிராயுதபாணியாக கோவில் வந்த தன் மனம் மயங்க மிகவும் சிறப்பானது (6)
8. கோடீஸ்வரனில் நூறில் ஒருவன் (6)
11. கூடியிருந்த முது பலா வெடித்துச் சிதற பயமிலாது முழுகு (4)
12. ஆவி பிரிந்த கிராமத்து மக்கள் துக்கம் (4)
15. வெள்ளிபோல் உயர்வாகக் கருதப்படாவிட்டாலும் அடுத்தது இதுதான் (2)
நீங்கள் புதிர் மன்னரா?
குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை 15-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. 15க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.
வாஞ்சிநாதன்
டிசம்பர் 2009 புதிர் விடைகள்குறுக்காக
3. புகுத்திய, 6. லண்டன், 7. பட்டர், 8. மகாபாரதம், 13. குடித்தனம், 14. கற்றாழை, 15. வாயுள்ள, 16. இடித்துரை
நெடுக்காக
1. பலராமன், 2. கடப்பாரை, 4. கும்பம், 4. திட்டம், 9. தட்டி, 10. சாதலையும், 11. தாம்பாளம், 12. காற்றாடி, 13. குழைந்து
டிசம்பர் 2009 புதிர் மன்னர்/அரசி
ஷீலா கோபால், ஜான்ஸ் கிரீக், ஜார்ஜியா
சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி, சான் ஹோசே
ஸ்ரீதரன் கிருஷ்ணமூர்த்தி, ஃப்ரீமாண்ட், கலி.
மற்றவர்கள்
சுரேஷ்பாபு, ஷார்ஜா; ஹரிஹரன் சங்கரன், மும்பை; யோசிப்பவர், சென்னை; அருணா ஸ்ரீனிவாசன், ஃப்ரீமாண்ட், கலி.; ராஜகோபாலன், அசோக் நகர், சென்னை; பூங்கோதை; எஸ். பி. சுரேஷ், மயிலாப்பூர்; லக்ஷ்மி ஷங்கர், நார்கிராஸ், ஜார்ஜியா; ஷாந்தி நாராயணன், கலி.; வீ.ஆர். பாலகிருஷ்ணன், ஜவஹர் நகர், சென்னை; ஸ்ரீனிவாசராமானுஜம், இல்லினாய்; அம்ருதா பார்த்தசாரதி, சிட்னி, ஆஸ்திரேலியா; லாவண்யா ராமநாதன், ஃபோஸ்டர்சிடி, கலி.; ஹேமா லக்ஷ்மிநாராயணன், சான் டியேகோ, கலி.; பி.டி. அரசு, புது டில்லி; ராமையா நாராயணன், ஃபோல்சம், கலி.; ரவி சுந்தரம், பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா; ஸ்ரீதர் விஜயராகவன், ஷாங்காய்; வி. சந்திரசேகரன், சன்னிவேல், கலி.; குன்னத்தூர் சந்தானம், சென்னை; கே. ஆனந்த், சான் ஹோசே, கலி.; சௌம்யா, ப்ளிமத் மீட்டிங், பென்சில்வேனியா; ராஜேஷ் கார்கா, எடிசன், நியூ ஜெர்ஸி; யோகநந்தினி ஜனார்த்தனன், சன்னிவேல், கலி.; ஆர்.வைத்தியநாதன், சான்டா கிளாரா, கலி.; மாலதி கண்ணன், தி.நகர், சென்னை; நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர், நியூ யார்க்; V.N. கிருஷ்ணன், சென்னை; கிருஷ்ணமூர்த்தி; ராஜா செழியன், முள்ளியவாய்க்கால், இலங்கை; நிர்மலா ரவிசந்திரன், வர்ஜீனியா; மலர்விழி, சான் மாடியோ, கலி.