ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் விவாத அரங்கம்
ஆகஸ்ட் 31, 2009 அன்று ஹூஸ்டன் மீனாட்சியம்மன் திருக்கோயில் மண்டபத்தில் பாரதி கலை மன்றத்தின் சார்பில் 'கலாசார வேறுபாடுகளால் நமது குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து பெறுவது ஆதரவா? அல்லலா?' என்ற தலைப்பில் விவாதம் 'சொல்லின் செல்வி' திருமதி.உமையாள் முத்து அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சி பற்றிய விதிமுறைகளை குமார் கணேசன் முதலில் கூறினார். இளையவர்கள் சினேகா கணேசன் மற்றும் விநாயக் மாணிக்கவாசகம் உட்பட அணிக்கு 15 நபர்கள் வீதம் இரு அணிகளும் ஆர்வமாக பங்கேற்று அனல் பறக்க விவாதம் செய்தன. அத்தோடு பார்வையாளர்களில் சிலரும் தத்தமது கருத்துக்களையும் சொந்த அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டது சுவையாக இருந்தது.

மன்ற நிர்வாகிகள் ஸ்ரீகாந்த் வேணுகோபலன், எஸ்.நாராயணன், டாகடர் சாரநாதன், பிரசாத் மற்றும் ராஜா ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

கரு. மாணிக்கவாசகம்,
ஹூஸ்டன், டெக்சஸ்.

© TamilOnline.com