லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவில் நவராத்திரி திருவிழா
2009 செப்டம்பர் 19 முதல் 27 வரை லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவிலில் நவராத்திரிவிழா கொண்டாடப்பட்டது. தினமும் மாலை 5:30 மணி முதல் 6:30 மணிவரை சாஸ்த்ரி அவர்கள் லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை வாசித்தார். பின்னர் 7:30 வரை பாட்டுக் கச்சேரிகளை கான சரஸ்வதி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இதில், சான் ஃபெர்னாண்டோ வேல்லி வட்டாரத்தைச் சேர்ந்த இசை ஆசிரியைகள் சங்கரி செந்தில்நாதன், கல்யாணி சதானந்தம், சாய்பாபா பஜனை நடத்தும் சாந்தி, இந்து, கல்யாணி வீரராகவன், ஸ்லோகபஜனை நடத்தும் கீதா, பாலவிஹார் ஆசிரியர்கள் சுஜாதா, ரங்கு ஆகியோர் தத்தமது சிஷ்யர்களுடன் வந்து பாடினர்.

சரஸ்வதி பூஜை அன்று, கான சரஸ்வதி சிஷ்யர்கள் வாத்திய இசை வழங்கினர். இசை நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் மலிபு கோவில் குரு, பிரசாத் ஆரத்தி எடுத்தார்.

கொலுப்படிகளை வைக்க கஸ்துரி ரெங்கன், சிவதேவா, கிருஷ்ணா சம்பத், விஜய் மற்றும் ரங்கோலி கோலமிட ஹேமா ஆகியோர் உதவினர்.

ஸ்ரீநிதி

© TamilOnline.com